Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/கடித்து குதறும் தெரு நாய்கள்; மிரட்டும் மாடுகள்: 'குரோதி'யே காரணம் என எச்சரிக்கும் ஜோதிடர்கள்

கடித்து குதறும் தெரு நாய்கள்; மிரட்டும் மாடுகள்: 'குரோதி'யே காரணம் என எச்சரிக்கும் ஜோதிடர்கள்

கடித்து குதறும் தெரு நாய்கள்; மிரட்டும் மாடுகள்: 'குரோதி'யே காரணம் என எச்சரிக்கும் ஜோதிடர்கள்

கடித்து குதறும் தெரு நாய்கள்; மிரட்டும் மாடுகள்: 'குரோதி'யே காரணம் என எச்சரிக்கும் ஜோதிடர்கள்

UPDATED : ஜூலை 08, 2024 07:50 AMADDED : ஜூலை 08, 2024 02:49 AM


Google News
Latest Tamil News
'குரோதி ஆண்டால் பல்வேறு அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன; மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்' என, ஜோதிடர்கள் தெரிவித்து உள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில், மாநகராட்சி பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை, மே 5ம் தேதி இரண்டு வளர்ப்பு நாய்கள் கடித்து குதறியது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த மாதம் சென்னை கே.கே.நகர் பகுதியில் பிளஸ் 2 மாணவனும், கொளத்துாரில் 12 வயது சிறுவனும் வளர்ப்பு நாய்கள் கடித்ததில், பலத்த காயமடைந்தனர்.

சம்பவங்கள்


அத்துடன், கடந்த மாதம் திருவொற்றியூரில், சாலையில் நடந்து சென்ற பெண்ணை மாடு முட்டி தள்ளி, நீண்ட துாரம் இழுத்துச் சென்றது; காப்பாற்ற முயன்றவரையும் முட்டித் தள்ளியது. இவை போன்ற சம்பவங்கள், தமிழகம் முழுதும் மட்டுமின்றி, மற்ற மாநிலங்களிலும் நடந்து வருகின்றன.

எப்போதும் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு தெரு நாய்கள் மட்டுமின்றி, வளர்ப்பு நாய்களும் மனிதர்களை கடித்து குதறும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. அதேபோல, மாடுகள் தாக்குவதும் மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. திடீரென இவை போன்ற சம்பவங்கள் அதிகரிப்பதற்கும், 'குரோதி' ஆண்டும் ஒரு காரணம் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

ஆற்காடு பஞ்சாங்கத்தில், மேகாதிபதி சனி பலன்களின்படி, ஆடி முதல் கார்த்திகை வரை நல்ல மழை பெய்ய வாய்ப்பு உண்டு. தமிழகத்தில் விழுப்புரம், மதுரை, கோவில்பட்டி, நெல்லை, ராமேஸ்வரம், ராமநாதபுரம்; வட மாநிலங்களில் காசி, கயா போன்ற பகுதிகளில் பெரிய அளவு நில நடுக்கம் ஏற்படும்.

குரோதி ஆண்டில் பாக்கியஸ்தானாதிபதியான சந்திரன் தான்யாதிபதி பதவி வகிக்கிறார். ராசியில் மிதுனத்திலும், அம்சத்தில் புதனுடனும் இணைந்து இருக்கிறார். இதன் காரணமாக, சாலை விபத்துகள் அதிகரிக்கும்; நாய் முதல் தேனீ வரையிலான ஜந்துக்களால் தொந்தரவு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து ஜோதிடர்கள் கூறியதாவது:

ஜோதிடர் பரணிதரன், திருக்கோவிலுார்: குரோதி ஆண்டு குறித்த வெண்பாவில், 'கோரக் குரோதிதனில் கொள்ளை மிகும், கள்ளரினால் பாரினில் சனங்கள் பயமடைவார்' என்று கூறப்பட்டுள்ள வரிகளே, இந்த ஆண்டில் என்ன நடக்கும் என்பதை நமக்கு வெளிப்படுத்தி உள்ளன.

நேற்று வரை நாம் மிகவும் நம்பிக்கையோடு இருந்தவற்றில் மாற்றங்கள் தோன்றும். ஜீவராசிகள் சுபிட்சம் பெற்று, தங்கள் இயல்பை வெளிப்படுத்தும். வவ்வால், பாம்பு, எருது, கம்பளிப்பூச்சி, நாய், பூரான், பூனை, தேள், தேனீ, வண்டு, எலி போன்ற ஜீவராசிகளால் அசம்பாவிதங்கள் ஏற்படலாம்; பறவை காய்ச்சல் பரவும்.

ஆன்மிக சிந்தனை


நாட்டில் போதைப் பொருட்கள் எப்போதும் இல்லாத அளவிற்கு, அதிக அளவு புழக்கத்தில் இருக்கும்; மக்கள் பாதிப்படைவர். குப்பையிலிருந்து புதிய வைரஸ் நோய்கள் உண்டாகி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். நெடுஞ்சாலைகளில் அதிகபட்சமாக விபத்துகள் நேரும். காவல் துறையில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். பொதுமக்களுக்கு வயிறு சம்பந்தமான பிரச்னைகள் அதிகரிக்கும்.

மேக வெடிப்புகளால் அளவற்ற மழையை அடிக்கடி எதிர்கொள்ள நேரிடும். போலி பொருட்கள் விற்பனை அதிகரிக்கும். லஞ்ச லாவண்யம், லஞ்ச வழக்குகளில் சிக்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நீண்ட காலமாக தவறு செய்து வந்தவர்கள் பிடிபட்டு சிறைக்கு செல்வர். அதேநேரத்தில் மக்களுக்கு ஆன்மிக சிந்தனையும் கூடும்.

குரோதி ஆண்டு எப்படி இருக்கும் என்பது குறித்து, எப்போதோ எழுதப்பட்ட விதி இப்போது வெளிப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மனித குலத்திற்கு சவாலான ஆண்டாக இருக்கும். போலி பொருட்களால் பாதிப்பு ஏற்படும். கள்ளச்சாராயம் கூட போலி தான். புதிய வைரஸ் நோய் உருவாகி, மனித குலத்திற்கு சவால் விடும். மழை அளவு அதிகரிக்கும். விபத்துகள், உயிரிழப்புகள் நிறைய ஏற்படும் என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது.

விஷக்கிருமிகள்


ஜோதிடர் சிவகுரு, நங்கநல்லுார்: சுத்த வாக்கிய பஞ்சாங்க கணக்கின்படி, இந்த குரோதி ஆண்டு தமிழ் வெண்பா பாடலின்படி, விஷக்கிருமிகள் பரவுதல்; குப்பைகளில் இருந்து தொற்று உருவாகுதல்; சுற்றித் திரியும் தெரு நாய்களால் பாதிப்பு ஏற்படுதல்; சில விஷக்கிருமிகள் நீரில் விஷம் கலப்பது போன்ற நிலை ஏற்படும்.

ஆட்சியாளர்கள் கவனக்குறைவால் மக்களை பாதுகாக்க தவறுவர். மழை பொழிவு அதிகம் இருக்கும். அதை சேமிக்க ஆட்சியாளர்கள் தவறுவர். மழை நீர் கடலில் கலக்கும். குடிநீர் தட்டுப்பாடு போன்றவற்றால், ஆட்சியாளர்களுக்கு சங்கடங்கள் உருவாகும்.

தலைவர்கள் பதவிக்காக அடித்துக் கொள்வர். தவறு செய்தவர்கள் நீதிமன்ற தீர்ப்பின்படி தண்டனைக்கு உள்ளாவர். மக்கள் மிக எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

நமது நிருபர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us