பார்லிமென்ட் மைய மண்டபத்தில் கோலாகலம்
பார்லிமென்ட் மைய மண்டபத்தில் கோலாகலம்
பார்லிமென்ட் மைய மண்டபத்தில் கோலாகலம்

ஏழுமலையான் படம்
பிரதமர் மோடி பேசி முடித்ததும், அவருக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் மலர்கொத்து அளித்து, பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, திருப்பதி கோவில் லட்டுகள் அடங்கிய பை மற்றும் ஏழுமலையானின் பெரிய புகைப்படம் போன்றவற்றை அளித்து சந்திரபாபு நாயுடுவும், பவன் கல்யாணும் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழக முகங்கள்
இந்த கூட்டத்தில், தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், த.மா.கா., தலைவர் வாசன், முன்னாள் எம்.பி.,க்கள் பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம் மற்றும் ஜான் பாண்டியன், தேவநாதன் யாதவ் ஆகியோர் பங்கேற்றனர். தமிழக பா.ஜ., பிரபலங்களான வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகியோரை காண முடிந்தது.
பெயர் தெரியாமல் தவிப்பு
பார்லிமென்ட் மைய மண்டபத்திற்குள் அனைத்து தலைவர்களும் வந்து அமர்ந்து விட்ட நிலையில், கடைசியாக பிரதமர் வருவதில் சற்று தாமமானது. இதனால், பிரதமர் வரும் வரை, 15 நிமிடங்கள் வரையில், மண்டபத்தில் அமைதி நிலவியது.
அத்வானி, ஜோஷியிடம் ஆசி
ஜனாதிபதியை சந்திக்க செல்லும் வழியில், கட்சியின் முன்னோடிகளான அத்வானி(96), முரளி மனோகர் ஜோஷி(91) ஆகியோரின் வீடுகளுக்கு சென்று, மோடி ஆசி பெற்றார். முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் சந்தித்தார்