Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ கடன் சுமையில் தவிக்கும் இந்தியர்கள்

கடன் சுமையில் தவிக்கும் இந்தியர்கள்

கடன் சுமையில் தவிக்கும் இந்தியர்கள்

கடன் சுமையில் தவிக்கும் இந்தியர்கள்

UPDATED : ஜூலை 29, 2024 03:12 AMADDED : ஜூலை 29, 2024 12:53 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

இந்தியர்களில் பெரும்பாலானோர் கடன் சுமை கொண்டிருப்பதும், 60 வயதிற்கு மேலான பலரும் கடனுக்கான மாதத் தவணை செலுத்திக் கொண்டிருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியர்களின் நிதி ஆரோக்கியம் குறித்து அறிவதற்காக, பின்னவேட் எனும் நிதிச் சேவை நிறுவனம், 1,727 பேரிடம் இலக்கு நிர்வாகம், பட்ஜெட் வகுப்பது, வரி திட்டமிடல், முதலீடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து கருத்துக்கணிப்பு நடத்தியது.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில், 38 சதவீதம் பேர் மட்டுமே கடன் இல்லாமல் இருப்பதாக தெரிவித்துள்ளனர். 60 வயதிற்கு மேலானவர்களில் 31 சதவீதம் பேர், கடனுக்கான தவணை செலுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், எதிர்பாராத நெருக்கடிகளை சமாளிக்க கைகொடுக்கும் அவசரகால நிதி இருப்பதாக, 40 சதவீதம் பேர் மட்டுமே கூறியுள்ளனர். கவலை அளிக்கும் வகையில், 70 சதவீதம் பேருக்கு மேல் போதுமான காப்பீடு பெற்றிருக்கவில்லை என்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதிக நிகர மதிப்பு கொண்டவர்களில் பெரும்பாலானோர் தெளிவான நிதி இலக்குகளை கொண்டிருப்பதோடு, தங்கள் நிகர மதிப்பையும் நன்கு அறிந்துள்ளனர். எனினும் கணிசமானோர் ஓய்வுகால திட்டமிடலில் ஈடுபடவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us