டில்லி உஷ்ஷ்ஷ்: குற்றச்சாட்டுக்கு பதில் தயார்
டில்லி உஷ்ஷ்ஷ்: குற்றச்சாட்டுக்கு பதில் தயார்
டில்லி உஷ்ஷ்ஷ்: குற்றச்சாட்டுக்கு பதில் தயார்
ADDED : ஜூலை 28, 2024 04:56 AM

புதுடில்லி: தொடர்ந்து ஏழாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை செய்துள்ளார் நிர்மலா சீதாராமன். பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன், வீட்டில் பூஜை செய்து நெய் விளக்கு ஏற்றி வழிபட்டார். 'எல்லாம் நல்லபடியாக முடிய வேண்டும்' என வேண்டுதலும் செய்து கொண்டாராம். இதை தனக்கு நெருக்கமானவர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் அமைச்சர்.
தமிழகத்தின் பெயர் பட்ஜெட்டில் எங்குமே இல்லை என தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்ததோடு, நிடி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தார்.
நாட்டின் முதல் நிதி அமைச்சர் சண்முகம் செட்டியார், சி.சுப்ரமணியம், வெங்கட்ராமன் காலத்திலிருந்து சிதம்பரம் வரை, எத்தனை முறை தமிழகத்தின் பெயர் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது என்ற விபரங்களை நிதி அமைச்சக அதிகாரிகள் தயாரித்து வருகின்றனர்.
இந்த வாரத்தில் பார்லிமென்டில் பட்ஜெட்டிற்கு பதில் தரும்போது, தி.மு.க.,வை ஒரு வழியாக்க உள்ளார் நிதி அமைச்சர் என சொல்லப்படுகிறது.
இன்னொரு விஷயமும் பேசப்படுகிறது. பட்ஜெட்டிற்கு இந்த அளவிற்கு எதிர்ப்பு வரும் என பிரதமர் மோடி நினைக்கவில்லையாம். 'இது நமக்கு ஒரு பாடம். இதிலிருந்து திருத்திக்கொள்ளலாம்' என, பிரதமர் சொன்னாராம்.