டில்லி உஷ்ஷ்ஷ்: நிர்மலாவிற்கு பிரதமர் பாராட்டு
டில்லி உஷ்ஷ்ஷ்: நிர்மலாவிற்கு பிரதமர் பாராட்டு
டில்லி உஷ்ஷ்ஷ்: நிர்மலாவிற்கு பிரதமர் பாராட்டு
ADDED : ஜூலை 28, 2024 04:58 AM

புதுடில்லி: மத்திய அரசின் பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சிகள் வழக்கம் போல குறை சொல்லி வருகின்றன. சில பொருளாதார நிபுணர்கள் வரவேற்க, ஒரு சிலர் குறை கூறி வருகின்றனர்.
பட்ஜெட் தாக்கலான மறுநாள், பட்ஜெட் தயாரித்த குழுவை அழைத்து சிற்றுண்டி விருந்து அளித்தாராம் பிரதமர். ரகசியமாக நடந்த இந்த விருந்தில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதி அமைச்சக செயலர்கள் ஐந்து பேர், மூன்று இணை செயலர்கள், பிரதமர் அலுவலக சீனியர் அதிகாரிகள் கலந்து கொண்டனராம். இவர்கள் அனைவருக்கும் ஒரு பரிசும் அளித்தாராம் மோடி.
அனைத்து அதிகாரிகளையும் தட்டிக் கொடுத்து பாராட்டினாராம் மோடி. அரை மணி நேரம் நடந்த இந்த விருந்தில் நிதி அமைச்சரை பெரிதும் பாராட்டியுள்ளாராம் பிரதமர். 'மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு, முந்தைய பட்ஜெட்கள் ஒரு முக்கிய காரணம். உலக அளவில் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக மாற இந்த பட்ஜெட் உதவும்' என, சொன்னாராம் மோடி.
பட்ஜெட்டை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டனம் செய்து வருவது குறித்து அதிகாரிகள் கவலைப்பட்டனராம். 'அரசியலில் இதெல்லாம் சகஜம். அதை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் உங்கள் பணியைத் தொடருங்கள்' என, சமாதானப்படுத்தினாராம் பிரதமர்.