டில்லி உஷ்ஷ்ஷ்: பெரிய பங்களா கிடைக்குமா?
டில்லி உஷ்ஷ்ஷ்: பெரிய பங்களா கிடைக்குமா?
டில்லி உஷ்ஷ்ஷ்: பெரிய பங்களா கிடைக்குமா?
ADDED : ஜூலை 14, 2024 05:00 AM

புதுடில்லி: புதிதாக மத்திய அமைச்சரவையில், அமைச்சரானவர்களுக்கு டில்லியில் அரசு பங்களா ஒதுக்குவதில் பிரச்னை ஏற்பட்டது. காரணம், முன்னாள் அமைச்சர்கள் பலர், தங்களுடைய பங்களாக்களை காலி செய்யவில்லை; ஆனால், உள்துறை அமைச்சர் அமித் ஷா சம்பந்தப்பட்டோருடன் பேசிய உடனேயே, இவர்கள் தங்கள் பங்களாக்களை காலி செய்தனர்.
இந்நிலையில், தனக்கு பெரிய பங்களா ஒதுக்கப்பட வேண்டும் என, எதிர்க்கட்சி தலைவரான ராகுல் கோரிக்கை வைத்துள்ளாராம். இவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு இருப்பதால், அதற்கு ஏற்றாற்போல் பங்களா வேண்டும். மேலும், '20 கார்கள் வரை நிறுத்தும் வசதி வேண்டும்; என் அம்மா சோனியா வசிக்கும் 10, ஜன்பத் பங்களாவிற்கு அருகேயே வீடு வேண்டும்' என, சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு கடிதம் எழுதியுள்ளாராம், ராகுல்.
'ராகுலின் செக்யூரிட்டி காரணமாக, 25 போலீசார் அவரது வீட்டில் இருக்க வேண்டும். அதற்கேற்ப பெரிய பங்களாவை தேடி வருகின்றனர். இதனால், மத்திய அமைச்சர்களில் யாராவது ஒருவரின் பங்களாவை, அவருக்கு ஒதுக்கும் நிலை ஏற்படலாம்' என, சொல்லப்படுகிறது.