Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ 'மாசு' உள்ள வாரிய ஆபீசரின் 'கண்துடைப்பு'; பெட்டிக்கடையில போலீசுக்கு 'செம' கவனிப்பு

'மாசு' உள்ள வாரிய ஆபீசரின் 'கண்துடைப்பு'; பெட்டிக்கடையில போலீசுக்கு 'செம' கவனிப்பு

'மாசு' உள்ள வாரிய ஆபீசரின் 'கண்துடைப்பு'; பெட்டிக்கடையில போலீசுக்கு 'செம' கவனிப்பு

'மாசு' உள்ள வாரிய ஆபீசரின் 'கண்துடைப்பு'; பெட்டிக்கடையில போலீசுக்கு 'செம' கவனிப்பு

UPDATED : ஜூலை 23, 2024 05:07 AMADDED : ஜூலை 22, 2024 10:45 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

திருப்பூர் ஈஸ்வரன் கோவிலுக்கு சென்று, சுவாமி தரிசனம் செய்து திரும்பினர் சித்ராவும், மித்ராவும். கோவில் வாசலில் தீபம் விற்பனை துவங்கியிருந்தது.

''ஏற்கனவே, பட்டி விநாயகர் கோவில்கிட்ட தேங்காய், பழம் விற்கிற கடை இருக்கு. அதை ஏலம் விட்டும், கோவிலுக்கு 'ரெவின்யூ' பார்க்கிறாங்க. அப்படியிருந்தும், 10, 15 ரூபாய்ன்னு தீபம் வேற விக்கிறாங்களே,'' என புலம்பினாள் மித்ரா.

''ஆமா மித்து, இதபத்தி விசாரிச்சேன். கோவிலுக்கு வர்ற வருமானத்தை விட செலவு அதிகமா இருக்குன்னு 'ஆடிட்'ல சொல்லிட்டாங்களாம். அதனால, தீபம் விக்கிறதா சொல்றாங்க,'' என்றாள் சித்ரா.

''இவ்ளோ அதிக விலைக்கு வித்தாங்கன்னா, வருவாய் அதிகரிக்காது; உண்டியல் காணிக்கை தான் குறையும்,'' என ஆதங்கப்பட்ட மித்ரா, ''அனுப்பர் பாளையம் ஏ.வி.பி., ரோட்ல வாரச்சந்தை இருக்கு. அதை கார்ப்பரேஷனில் டெண்டர் விட்டிருக்காங்க. எடுத்தவங்க, பக்கத்துல வேலம் பாளையம் கோவில் வளாகத்துல, சண்டே அன்னைக்கு கடை போடற வியாபாரிங்ககிட்ட இருந்தும் சுங்கம் வசூலிக்கிறாங்களாம்,''

''கோவிலுக்கு சொந்தமான இடத்துல, அவங்க எப்படி சுங்கம் வசூலிக்கலாம்ன்னு, கடை போட்டிருக்கற வியாபாரிங்க கேக்கிறாங்களாம். இந்த விவகாரம் பிரச்னையாவே இருக்காம்,'' என அடுத்த மேட்டரை சொன்னாள்.

''இதெல்லாம் எங்க போய் சொல்ல...'' என்ற சித்ரா, ''மித்து, கார்ப்பரேஷன் பூங்காவுக்கு போயிட்டு போலாம்,'' என சித்ரா சொல்ல, பூங்காவை நோக்கி ஸ்கூட்டரை விரட்டினாள் மித்ரா. டிக்கெட் வாங்கி பூங்காவுக்குள் நுழைந்த இருவரும், மர நிழலில் இருக்கையில் அமர்ந்தனர். அங்கிருந்த 'பாஸ்ட் புட்' கடையில் இருந்து, பானிபூரி வாங்கி வந்தாள் மித்ரா.

தவளை தன் வாயால் கெடும்!


''நம்ம ஊர்ல இருக்கற பெட்டிக்கடை, டாஸ்மாக் 'பார்'க்கு வெளியில இருக்கற பெட்டிக்கடைகளில் பான்பராக், குட்கா விக்கிறாங்களாம். இதுல பெட்டிக்கடைகள்ல மட்டும் ரெய்டு நடத்தி, நடவடிக்கை எடுக்கிற உணவு பாதுகாப்பு ஆபீசர், 'டாஸ்மாக்' பார்ல இருக்கற கடைகளை கண்டுக்கிறதே இல்ல,''

''மாசம், 10 ஆயிரம் ரூபா வரை கல்லா கட்றாங்க''ன்னு, டூபாக்கூர் ரிப்போர்ட்டர்ஸ் சிலர், 'வாட்ஸ் ஆப்' குரூப்ல கிளப்பிவிட்டுட்டாங்க; அந்த பதிவோட சேர்த்து, அந்த ஆபீசரோட 'போட்டோ'வையும் சேர்த்து போட்டுட்டாங்களாம். இத பார்த்த ஆபீசர் ரொம்பவே டென்ஷன் ஆகிட்டாங்களாம்,''

''பலர் தங்களோட சுய லாபத்துக்காக, இந்த மாதிரி யெல்லாம் புகார் சொல்றது ரொம்ப தப்பு. இதுக்கு உரிய ஆதாரத்தை காட்டலைன்னா, கலெக்டர்கிட்ட அனுமதி வாங்கி, கேஸ் போடுவேன்'னு சொல்லி ஒரு பதிவு போட்டிருக்காங்க'' என்றாள் மித்ரா.

''அப்புறம் என்ன ஆச்சு...'' ஆர்வமானாள் சித்ரா.

''பான்பராக், குட்கா விக்கிற பெட்டிக் கடைகள்ல இருந்து, இந்த டுபாக்கூர்ஸ் சிலரு, மாசாமாசம் மாமூல் வாங்கிட்டு போறாங்க'ங்கற விஷயம் தெரிய வந்திருக்கு. யார், யாருக்கு எவ்வளவு மாமூல் தர்றாங்கங்ற லிஸ்ட்டையும், பெட்டிக்கடைக்காரங்க கொடுத்திருக்காங்க. அதில, பல போலீஸ்காரங்க பேர் இருக்காம்...'' என்றாள் மித்ரா.

''செம மித்து. தவளை தன் வாயால் கெடும்ங்கற மாதிரி ஆகிடுச்சு பாரு'' என சிரித்த சித்ரா, ''இந்த விஷயத்துல, கலெக்டர் கொஞ்சம் கவனம் செலுத்தணும். போலீஸ்ன்னு சொல்லவும் தான் எனக்கொரு விஷயம் ஞாபகத்துக்கு வருது'' என்றவள், தொடர்ந்தாள்.

ஆளுங்கட்சிக்கு 'குட்டு'


''குற்றவியல் சட்ட திருத்தங்களை திரும்பப் பெறணும்ன்னு சொல்லி, தாராபுரத்துல, மா.கம்யூ., கட்சிக்காரங்க ஆர்ப்பாட்டம் நடத்தினாங்க. கூட்டத்துல பேசின, 'கனக' நிர்வாகி, 'ஆளுங்கட்சியோட நகர நிர்வாகியாக இருக்கற ஒருத்தரு, 'டாஸ்மாக் பார்' காரங்ககிட்ட மாசாமாசம், 30 ஆயிரம் ரூபா மாமூல் வசூல் பண்றாரு,''

''கொடுக்கலைன்னா, 'பார்' நடத்த முடியாதுன்னு மிரட்டறாரு'ன்னு வெளிப்படையாகவே பேசியிருக்காரு. 'நம்ம பேரை கெடுக்க இவங்க ஒருத்தரே போதும்; எல்லாம் அந்த 'முருக'னுக்கே வெளிச்சம்'ன்னு ஆளுங்கட்சிக் காரங்க புலம்பிட்டே போயிருக்காங்க,'' என்றாள் மித்ரா.

''ரூரல்ல வேல பார்க்குற எஸ்.ஐ.,களுக்கு கொஞ்ச நாள் முன்னாடி 'டிரான்ஸ்பர்' போட்டாங்க. காங்கயத்துல இருக்கற ஒருத்தர், டிரான்ஸ்பர் போட்ட இடத்துக்கு போகாம, பழைய இடத்துக்கே, 'ஆர்டர்' வாங்கிட்டு வந்துட்டாராம். லோக்கல் மினிஸ்டரோட உதவியாளரு தான், இதுக்கு உதவி பண்ணியிருக்காருன்னு சொல்றாங்க,'' என்றாள் சித்ரா.

''இப்படி தான் இன்னும் கொஞ்சம் பேரு, பழைய இடத்துக்கே திரும்பவும் போக 'ட்ரை' பண்றாங்களாம். ரெண்டு மூனு மாசத்துல தீபாவளி வரப்போகுதுல்ல; கலெக்ஷன் 'மிஸ்' ஆகிடும்ன்னு நினைக்கறாங்க போல'ன்னு, 'டிபார்மென்ட்' ஆட்களே பேசிக்கிறாங்க,'' என்றாள் மித்ரா.

''நல்ல ஊர்'ல இருக்கற ஒரு ஆபீசர், கோவில் வழி பக்கத்துல இருக்கற 'செக்போஸ்ட்'ல நின்னுக்கிட்டு, வர்ற போற லாரிகளையெல்லாம் நிறுத்தி, 'செமையா' கல்லா கட்றாராம். இந்த விஷயம் பெரிய ஆபீசர் காதுக்கும் போயிருக்கு. அவரு கூப்பிட்டு 'வார்ன்' பண்ணியும் கூட, கண்டுக்காம வசூல் பண்ணிட்டே இருக்காராம்,'' என்றாள் சித்ரா.

''அக்கா, இதேபோல, அவிநாசிக்கு பக்கத்துல, நரியம்பள்ளிபுதுாரில், கொரோனா டைமில, போட்ட செக்போஸ்ட் இன்னும் அப்படியே இருக்குது. அங்க டியூட்டி பார்க்கிற சிலர், போற வர்ற வண்டியை புடிச்சு, 300, 500ன்னு வசூல் பண்றாங்களாம். உட்கோட்ட அதிகாரி தான், இதுக்கொரு முற்றுப்புள்ளி வைக்கோணும்னு மக்கள் எதிர்பார்க்கிறாங்க...'' என்றாள் மித்ரா.

கண்துடைப்பு வேண்டாமே!


''பல்லடத்துல மக்களுடன் முதல்வர் 'கேம்ப்' நடந்துச்சுல்ல; இதுல, பட்டா மாறுதல் 'அப்ளிகேஷன்' எடுத்துட்டு வர்றவங்க கிட்ட, 'இதுக்காக எதுக்கு வந்தீங்க; ஆபீஸ் வந்து பாருங்க'ன்னு சொல்லியிருக்காங்க, ரெவின்யூ அதி காரிங்க,'' என்றாள் மித்ரா,

''அவங்களுக்கு வர்ற 'ரெவின்யூ'வை கணக்குல வச்சுத்தான் அப்படி சொல்லி இருப்பாங்க போல'' எனக்கூறி சிரித்தாள் சித்ரா.

''இதேபோலத்தான், திருப்பூர்ல சாயக்கழிவு தண்ணியை முறைகேடா, நொய்யல் ஆத்துல கலந்து விடறாங்கன்னு விவசாயிகள் புகார் தெரிவிச்சாங்க. உடனே, கலெக்டரு, மாசுக்கட்டுப்பாடு வாரிய ஆபீசர்களை கூப்பிட்டு, 'டோஸ்' விட்டிருக்காரு,''

''அப்போ, சாயக்கழிவு கிடையாதுங்க. பட்டன் ஜிப், பிரின்டிங் கழிவுதான் அது என சமாளிச்சுட்டாங்க. இத தெரிஞ்சுக்கிட்ட விவசாயிங்க, 'மழை பெய்றப்போ, சில சாய ஆலைக்காரங்க நொய்யல் ஆத்துல சாய கழிவை திறந்து விடற விஷயம் ஆபீசர்ங்களுக்கு தெரியாதா? ன்னு, குறைகேட்பு கூட்டத்துல கேள்வி மேல கேள்வி கேட்டிருக்காங்க,'' என்றாள் சித்ரா.

''இது விஷயத்துல, கலெக்டர் தான் முடிவு எடுக்கணும்,'' என்ற மித்ரா, ''டவுன் பிளானிங் அத்தாரிட்டி ஆபீசில லஞ்சம் கரைபுரண்டு ஓடுதாம். யாராவது 'டிடிசிபி' அப்ரூவலுக்கு போனா, 'இன்ஜினியர் மூலமா வாங்க. தனியா ஏன் வந்து சிரமப்படுறீங்கன்னு,' சொல்லும் ஒரு ஆபீசர், ஒரு இன்ஜினியரையும் 'ரெகமண்ட்' பண்றாராம். அதுக்கப்பறம், 'கவனிப்பு' நடந்தவுடன் அப்ரூவல் கொடுக்கறாங்களாம்...''

''அப்ப ரெண்டு பேர் காட்டிலும் வசூல் மழைன்னு சொல்லு...'' என சிரித்த சித்ரா, ''ஓகே மித்து. போலமா? அப்படியே 'குமார் பிரதர்ஸ்' கடைக்கு போய், பர்ச்சேஸ் பண்ணிட்டு கிளம்பலாம்...'' என புறப்பட்டவுடன், மித்ராவும் கிளம்பினாள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us