
போலீசார் கூறியதாவது:
சென்னை பெரம்பூரை பூர்வீகமாக கொண்டவர் கிருஷ்ணன். ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த அவர், தி.க., ஆதரவாளர். அவரது மகன் தான் ஆம்ஸ்ட்ராங். கடந்த, 1990களில் குத்துச் சண்டை பயிற்சி எடுத்து வந்த அவர், ஆதிதிராவிடர்களுக்கு எதிராக செயல்படுவோர் மீது சிறிய அளவிலான அடிதடி உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
ரவுடிகள் தொடர்பு
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரான பூவை மூர்த்தி, அம்பேத்கர் மக்கள் விடுதலை முன்னணி என்ற அமைப்பை துவங்கினார். அதில், ஆம்ஸ்ட்ராங் முக்கிய நிர்வாகியாக இருந்தார். 2002ல் பூவை மூர்த்தி மறைந்தார். அக்கட்சியின் தலைவர் பதவியை ஏற்க ஆம்ஸ்ட்ராங் விரும்பினார்; அது முடியாமல் போனதால், அக்கட்சியில் இருந்து விலகினார்.
வலது கரம்
தென்னரசுக்கும், கூலிப்படை தலைவனான ஆற்காடு சுரேஷுக்கும் யார் பெரிய ரவுடி என்பதில் போட்டி ஏற்பட்டு, ஒருவரையொருவர் தீர்த்துக்கட்ட திட்டம் போட்டனர். அப்போது, தென்னரசுக்கு பாதுகாவலராக ஆம்ஸ்ட்ராங், பாம் சரவணன் ஆகியோர் இருந்தனர்.
கண்டிப்பு
சுரேஷ், ஒற்றைக்கண் ஜெயபால் ஆகியோர் சிறையில் இருந்து வெளியே வந்ததும், கதைகளை முடிக்க ஒருவரையொருவர் நாள் பார்த்து காத்து இருந்தனர்.
காரில் சிக்கிய கைத்துப்பாக்கி
ஆம்ஸ்ட்ராங்கிடம், இத்தாலியில்
இருந்து வாங்கப்பட்ட, பெரிட்டா டாம்கேட் ஐநாக்ஸ் 3032 எனும் மாடல்
கைத்துப்பாக்கி உள்ளது. அதற்கு முறைப்படி உரிமம் பெற்று வைத்திருந்தார்.
இந்த துப்பாக்கி, 9 - 20 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது, 400
கிராம் எடை உடையது. ஒன்பது ரவுண்ட் வரை சுட முடியும்.