
திரையுலகில் 20 வருடங்களை நிறைவு செய்த ஷர்வானந்த்
இந்த நிலையில் இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு தனது திரையுலக பயணத்தில் 20 வருடங்களை வெற்றிகரமாக கடந்து விட்டதாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் ஷர்வானந்த். இதுகுறித்து அவர் கூறும்போது, “இந்த திரையுலக பயணம் ஒரு ரோலர் கோஸ்டர் ரைடு போல நட்பு, கடுமையான சவால்கள், ஏற்ற இறக்கங்கள்,புன்னகை, போராட்டங்கள் என அனைத்தும் கலந்ததாக இருந்தது” என்று கூறியுள்ளார் ஷர்வானந்த்.
இந்த 20 வருட பயணத்தில் தனக்கு துணையாக நின்ற ரசிகர்கள் சுக துக்கங்களில் எப்போதும் தன்னுடன் துணை நின்ற நலம் விரும்பிகள் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் ஷர்வானந்த் கூறியுள்ளார். அதுமட்டுமல்ல ரசிகர்களை எப்போதும் உற்சாகப்படுத்தும் விதமாக ரன் ராஜா ரன் என்பது போல தான் நிற்காமல் ஓடிக்கொண்டே இருப்பேன் என்றும் உறுதி அளித்துள்ளார்.
தனது 20 வருட திரை உலக பயணத்தில் இதுவரை 34 படங்களில் ஷர்வானந்த் நடித்துள்ளார் அவரது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவரது 35 வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்படத்தை ஸ்ரீராம் ஆத்ரேயா என்பவர் இயக்குகிறார்.
நீண்ட நாட்களாகவே இவரது திருமணம் எப்போது என பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் தான், மறைந்த ஆந்திர எம்எல்ஏ கோபாலகிருஷ்ண ரெட்டியின் பேத்தியான ரக்சிதா என்பவருடன் இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!