
ஜெயசூர்யா நடிக்கும் மாயன் சாப்டர் 1
அடுத்ததாக மாயன் என்கிற படத்தை இயக்குகிறார் இயக்குனர் ஜித்தின் கே ஜோஸ். இதில் கதாநாயகனாக ஜெயசூர்யா நடிக்கிறார். சமீபத்தில் ஜெயசூர்யா நடிபில் வெளியான ஆடு 3 திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில் அவரது அடுத்த பிரம்மாண்ட படமான கத்தனார் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் தற்போது புதிதாக தான் ஒப்பந்தமாகி இருக்கும் இந்த மாயன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார் ஜெயசூர்யா. படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் துவங்க இருக்கிறது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!