
வாடிவாசல்ஐ தள்ளி வைக்கிறாரா சூர்யா?
சூரி, விஜய் சேதுபதி நடிக்க வெற்றிமாறன் இயக்கி வரும் "விடுதலை" படத்தின் மொத்த வேலைகளையும் முடித்துவிட்டுத்தான் "வாடிவாசல்" பக்கம் வர உள்ளாராம் வெற்றிமாறன். அதற்குள்ள சிவா இயக்கத்தில் எப்போதோ அறிவிக்கப்பட்ட படத்தை மீண்டும் துவங்கும் முடிவில் உள்ளாராம் சூர்யா.
ரஜினிகாந்த் நடிக்க சிவா இயக்கி வரும் "அண்ணாத்த" படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் இந்த மாதத்திற்குள் முடிவடைய உள்ளது. நவம்பர் 4ம் தேதி இப்படம் வெளியாகிறது. இதற்கடுத்த படமாக சூர்யா படத்தை சிவா இயக்குவார் என்கிறார்கள்.
ரஜினிகாந்த்திற்காக இரண்டு முறை தனது படங்களை தள்ளி வைத்துள்ளார் சூர்யா. பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க முடிவெடுத்த போது அவர் ரஜினிகாந்த் நடிக்கும் "காலா" படத்தை இயக்கப் போய்விட்டார். சிவா இயக்கத்தில் நடிக்க முடிவெடுத்த போது அவர் "அண்ணாத்த" படத்தை இயக்கப் போய்விட்டார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!