
அண்ணாத்த போட்டியாக மாநாடு வெளியாவது ஏன் ?
அண்ணாத்த படத்திற்குப் போட்டியாக மாநாடு படம் வருவது திரையுலகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தீபாவளிக்கு அஜித் நடிக்கும் வலிமை படமும் வருமா என்பது குறித்தும் தற்போது கேள்வி எழுந்துள்ளது.
கொரோனா இரண்டாம் அலை தளர்வுகளுக்குப் பிறகு தியேட்டர்கள் 50 சதவீத இருக்கை அனுமதியுடன் கடந்த மாதம் 23ம் தேதி திறக்கப்பட்டது. எப்படியும் தீபாவளிக்கு முன்னதாக 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கிவிடுவார்கள் என திரையுலகத்தில் எதிர்பார்க்கிறார்கள்.
அண்ணாத்த படத்தைத் தயாரித்துள்ள நிறுவனம் திமுக.,விற்கு நெருக்கம் என்பதால் எப்படியும் அந்த அனுமதி கிடைக்கும் எனத் தெரிந்தே தான் மாநாடு படத்தையும் வெளியிட முடிவு செய்திருக்கலாம் என திரையுலகத்தில் கிசுகிசுக்கிறார்கள்.
ஒருவேளை 50 சதவீத இருக்கை தொடர்ந்தால் அண்ணாத்த பட வெளியீடு தள்ளிப் போகவும் வாய்ப்புண்டு. அதனால், போட்டிக்கு வேறு எந்தப் படமும் இல்லாத நிலையில் மாநாடு படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்கலாம்.
தீபாவளிக்கு அண்ணாத்த, மாநாடு ஆகிய படங்களை அறிவித்துவிட்டதால் வலிமை படம் அந்தப் போட்டியில் களமிறங்குமா அல்லது அதற்கு முன்னரோ, பின்னரோ வெளியாகுமா என்பது விரைவில் தெரிய வரும்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!