பாலா இயக்கத்தில் காதல் படம் - கீர்த்தி சுரேஷ் நாயகி
செப் 10, 2021
Advertisement
சேது, நந்தா, பிதாமகன் என ஹாட்ரிக் வெற்றிப் படங்களை கொடுத்த பாலா, அதன்பிறகு நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார் என தோல்வி படங்களையும் கொடுத்தார். கடைசியாக அவர் இயக்கி வர்மா அவருக்கு மோசமான அனுபவமாக அமைந்தது.
தற்போது சூர்யாவின் 2டி நிறுவனத்திற்கு பாலா படம் இயக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அதர்வா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது பாலாவின் வழக்கமான படமாக இல்லாமல் இளமை பொங்கும் காதல் படமாக இருக்கும் என்கிறார்கள். இதுபற்றிய முறையான அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!