
மோகன்.ஜியின் அடுத்த பரபரப்பு - ருத்ரதாண்டவம் டிரைலர் வெளியீடு
மதமாற்றம், ஜாதி அரசியல் மற்றும் பிசிஆர்., சட்டங்கள் ஆகியவற்றை இந்தப்படம் பேச போகிறது என்பதை இன்று வெளியாகி உள்ள டிரைலரை பார்த்தாலே புரிந்து கொள்ள முடிகிறது. கிறிஸ்துவராக மதம் மாறினால் பிசிஆர்., சட்டம் செல்லாது, என்னப்போய் சாதி வெறியனு ஊரெல்லாம் பேச வச்சுடீங்க... போன்ற வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இதனால் நிச்சயம் இந்த படமும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தும் என டிரைலரில் வரும் காட்சிகளை பார்த்தாலே புரிந்து கொள்ள முடிகிறது. அதேசமயம் டிரைலரில் கவுதம் மேனன் சகட்டுமேனிக்கு கெட்டவார்த்தை பேசி உள்ளார்.
ருத்ர தாண்டவம் படத்தில் நாயகனாக ரிச்சர்ட்டும், நாயகியாக தர்ஷா குப்தாவும் நடித்துள்ளனர். மற்றுமொரு முக்கிய வேடத்தில் வில்லனாக இயக்குனர் கவுதம் மேனன் நடித்துள்ளார். இவர்கள் தவிர ராதாரவி, தம்பி ராமைய்யா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் அடுத்தமாதம் வெளியாக உள்ளது.
டிரைலர் லிங்க் இதோ : https://www.youtube.com/watch?v=noD8uV0xcOw
இந்த டிரைலர் மற்றும் இந்த செய்தி பற்றிய உங்களின் மேலான கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கலாம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!