
வலிமை, மாநாடு - அடுத்த சிங்கிள் விரைவில்...
வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிக்க உருவாகி வரும் "மாநாடு" படத்தின் முதல் சிங்கிள் "மெஹர்சிலா" இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியானது.
"வலிமை" படத்தின் அப்டேட் வேண்டும் என்று தான் ரசிகர்கள் அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், "வலிமை" படத்தின் அப்டேட்டுடன் "மாநாடு" பட அப்டேட்டையும் கொடுத்திருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, சீக்கிரமே "வலிமை, மாநாடு" படங்களின் அடுத்த சிங்கிள் வர உள்ளது, யுவன் ரெடி செய்துவிட்டார்,” என வெங்கட் பிரபு பதிலளிக்கிறார். அவர் விளையாட்டாகச் சொன்னாரா, அல்லது உண்மையாகச் சொன்னாரா என்பது விரைவில் தெரிந்துவிடும்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!