
நான் தான் முதல் பிகில்: சூர்யா தகவல்
அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்த நிகழ்ச்சி மூலம் என் கல்லூரி நண்பர்களை மீண்டும் ஒரே இடத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. எனது கல்லூரி கால இனிமையான நினைவுகள் மனதுக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. கல்லூரி காலத்தில் எனக்கு பாடத் தெரியாது. ஆனால் பாடல்களை விசில் மூலம் வெளிப்படுத்துவேன். கல்லூரி விழாக்களில் எனது விசில் தான் சத்தமாக கேட்கும். அதனால் எல்லோரும் என்னை பிகில் என்று பட்டப்பெயர் சொல்லி அழைப்பார்கள். அப்படி அழைத்த பலர் இங்கே இருக்கிறார்கள். என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!