
கமலுடன் மாலிக் படம் பார்த்த விக்ரம் படக்குழுவினர்
சமீபத்தில் தான் பஹத் பாசில் நடித்த மாலிக் திரைப்படம் ஒடிடி தளத்தில் வெளியானது. இந்தநிலையில் கமல், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட விக்ரம் படக்குழுவினர் சிலர் படப்பிடிப்பு முடிந்தபின்னர் மாலிக் படத்தை பார்த்து ரசித்துள்ளனர்.
இந்தப்படத்தை இயக்கிய மகேஷ் நாராயணன், கமலின் விஸ்வரூபம் படத்திற்கு படத்தொகுப்பாளராக பணியாற்றியவர். அந்த நட்பின் அடிப்படையில் கமலுக்காக இந்தப்படத்தை சிறப்பு திரையிடல் செய்து திரையிட்டு காட்டிய மகேஷ் நாராயணன், கமல், லோகேஷ் கனகராஜ், பஹத் பாசில் ஆகியோருடன் அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் சோஷியல் மீடியாவில்,வெளியிட்டுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!