
அண்ணாத்த, பீஸ்ட் டுக்கு முன்பே வலிமை வெளியீடு ?
அஜித் நடித்து வரும் "வலிமை" படத்திற்காக இன்னும் ஒரு முக்கியமான சண்டைக்காட்சியை படமாக்க வேண்டியுள்ளதாம். இதற்கான படப்பிடிப்பு விரைவில் ஐதராபாத்தில் நடக்கும் எனச் சொல்கிறார்கள். அது முடிந்தாலும் படத்தை அடுத்த மாதம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிட வாய்ப்பில்லை. மிகக் குறுகிய நாட்களே உள்ளது.
எனவே, படத்தை அதற்கடுத்து வரும் பண்டிகை நாட்களில் ஒன்றில்தான் வெளியிட வேண்டியிருக்கும். அப்படிப் பார்த்தால் செப்டம்பர் 10ம் தேதி வினாயகர் சதுர்த்தி தினமும், அக்டோபர் 14 ஆயுத பூஜை தினமும் வர உள்ளது. அந்த இரண்டு நாட்களில் ஏதாவது ஒரு நாள் படத்தை வெளியிடப் பொருத்தமான நாளாக இருக்கும். தீபாவளி வரை "வலிமை" படத்தின் வெளியீட்டை தள்ளி வைக்க மாட்டார்கள் என்றும் கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
"வலிமை" அப்டேட் வெளிவரும் போது படத்தின் வெளியீட்டுத் தேதிக்கான அறிவிப்பும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!