
விஜய் மகன், மகள் பெயரில் போலி சமூகவலைதள கணக்குகள்
ஜூன் 15, 2021
Advertisement
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவருக்கு ஜேசன் விஜய் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர். சமூகவலைதளமான டுவிட்டரில் இவர்களின் பெயரில் போலியான முகவரி உடன் கணக்கு துவங்கி அதில் இவர்களின் படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. இந்த டுவிட்டர் கணக்கு விஜய் மகன், மகள்களின் உண்மையான கணக்கு என நம்பி லட்சக்கணக்கான ரசிகர்கள் அவர்களை பின் தொடந்து வருகின்றனர். ஆனால் இவை எதுவுமே விஜய் மகன், மகள்களின் உண்மையான கணக்குகள் அல்ல. இன்னும் சொல்லப்போனால் டுவிட்டர் மட்டுமல்ல, வேறு எந்த சமூக ஊடகங்களிலும் இவர்கள் இல்லை. ஆகவே ரசிகர்கள் இதுபோன்ற போலி வலைதளங்களில் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என நடிகர் விஜய்யின் தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமீபகாலமாக பிரபலங்களின் பெயர்களில் சமூக ஊடகங்களில் போலியான கணக்குகள் துவங்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பான சில பிரபலங்கள் போலீசிலும் புகார் அளித்து உள்ளனர்.
சமீபகாலமாக பிரபலங்களின் பெயர்களில் சமூக ஊடகங்களில் போலியான கணக்குகள் துவங்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பான சில பிரபலங்கள் போலீசிலும் புகார் அளித்து உள்ளனர்.
Advertisement



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!