
சிறப்பு அனுமதியுடன் இரவு ஊரடங்கிலும் அண்ணாத்த படப்பிடிப்பு ?
ரஜினிகாந்த் நடித்து வரும் "அண்ணாத்த" படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. சிரஞ்சீவி, மகேஷ் பாபு, ராம் சரண் ஆகியோர் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகள் கொரோனா பயம் காரணமாக அங்கு நிறுத்தப்பட்டுவிட்டன. ஆனால், "அண்ணாத்த" படப்பிடிப்பை மட்டும் நடத்தி வருகிறார்களாம். தீபாவளிக்கு படத்தை வெளியிட முடிவு செய்துவிட்டதால் இப்படி நடத்துவதாகச் சொல்கிறார்கள்.
இதனிடையே, படத்தை உரிய காலத்தில் முடிக்க வேண்டுமென்றால் இடைவிடாமல் படப்பிடிப்பு நடத்த வேண்டி உள்ளதாம். அதனால், தற்போது தெலங்கானாவில் இரவு நேர ஊரடங்கு இருந்தாலும் சிறப்பு அனுமதி பெற்று படத்தை நடத்த உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடம் அங்கு "அண்ணாத்த" படப்பிடிப்பு நடந்த போது படக்குழுவில் உள்ள சிலருக்கு கொரானோ பாதிப்பு ஏற்பட்டது. ரஜினிகாந்தும் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சில நாட்கள் ஓய்வு எடுத்து பின்னர் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பினார்.
இப்போது கொரோனா பரவல் தீவிரமாக உள்ள நிலையில், இரவு நேர ஊரடங்கு உள்ள சமயத்திலும் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்துவதை தெலுங்குத் திரையுலகினரே ஆச்சரியத்துடன் பார்க்கிறார்களாம்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!