
விஜய் 65 நாயகியானார் பூஜா ஹெக்டே
மார் 24, 2021
Advertisement
‛மாஸ்டர்" படத்திற்கு பின் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். இது இவரின் 65வது படமாகும். இப்படத்தில் நாயகியாக நடிக்க பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தானாவிடம் பேசி வந்தனர். இப்போது பூஜா நடிப்பது உறுதியாகி உள்ளது. இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். தமிழில் முகமூடி படம் மூலம் அறிமுகமான பூஜா, அப்பட தோல்வியில் பிறமொழிகளில் நடித்தார். தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறியிருக்கும் அவருக்கு மீண்டும் தமிழில் விஜய் பட வாய்ப்பு வந்துள்ளது. தமிழில் கிடைத்த முதல் தோல்வியை இப்படம் மூலம் சரி செய்வார் என நம்பலாம்.
Advertisement



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!