
பிரபாஸ் - யஷ் இருவருக்குமான படங்கள் கைமாறிய சுவாரஸ்யம்
அதாவது கேஜிஎப் படத்தின் கதையை அவர் எழுதியதே பிரபாஸுக்காகத்தானாம். ஆனால் பாகுபலி படத்தின் வெற்றியால் பிரபாஸை, அவரால் எளிதில் நெருங்க முடியவில்லை. அந்தசமயத்தில் தான், நடிகர் யஷ், இந்தப்படத்தின் கதையை கேட்டு, தான் நடிக்க விரும்புவதாக முன்வந்துள்ளார். அப்படித்தான் கேஜிஎப் படம் உருவானது. அந்தப்படம் வெற்றி பெற்றதும் அந்த சமயத்தில் யஷ்ஷை வைத்தே, அடுத்த படம் இயக்கலாம் என பிரசாந்த் நீல் உருவாக்கிய கதை தான் சலார்..
ஆனால் கேஜிஎப் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் வேலைகள் ஆரம்பித்து விட்டதால், அதிலும் யஷ் தான் ஹீரோவாக நடித்தாக வேண்டிய சூழல் உருவானது. இந்தநிலையில் தான், கேஜிஎப் கொடுத்த வெற்றி மூலம், பிரபாஸை சந்திக்கும் வாய்ப்பு, பிரசாந்த் நீலுக்கு எளிதாக கிடைத்தது. அவரிடம் சலார் படத்தின் கதையை சொன்னபோது, உடனே ஒப்புக்கொண்டாராம். இருந்தாலும் யஷ்ஷை மனதில் வைத்து எழுதிய கதை என்பதால், பிரபாஸின் மாஸுக்கு ஏற்ற மாதிரி சில திருத்தங்கள் செய்து, தற்போது அந்த படத்தை இயக்கியும் வருகிறார் பிரசாந்த் நீல்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!