
ஜோதிகாவுடன் 18ம் படி கருப்பணசாமியை தரிசனம் செய்த சூர்யா!
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த 15ம் தேதி திரைக்கு வந்துள்ள படம் "கருப்பு". இந்த படம் இதுவரை 300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவாளர், இசை அமைப்பாளர் ஆகியோருக்கு சொகுசு கார் பரிசளித்து இருக்கிறார் சூர்யா. இந்த நிலையில் தனது மனைவி ஜோதிகாவுடன் மதுரை அழகர் கோவிலின் காவல் தெய்வமான 18ம் படி கருப்பணசாமியை அவர் தரிசனம் செய்திருக்கிறார்.
இந்த கோவிலில் சூர்யாவும், ஜோதிகாவும் சுவாமி தரிசனம் செய்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. முன்னதாக, இதே கோவிலுக்கு இப்படத்தின் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜியும் சென்று தரிசனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திரிஷா நாயகியாக நடித்துள்ள இப்படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!