
ஜெயராமின் காலைத் தொட்டு வணங்கிய தோனியின் மனைவி
இது ஜெயராமை மிகுந்த ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. நம் கால்களைத் தொடும் அளவிற்கு நாம் என்ன செய்து விட்டோம், ஒருவேளை தவறாக ஆள் மாறி போய் இப்படி வணங்குகிறாரோ என்று நினைத்தாராம் ஜெயராம். ஆனால் நடந்தது என்னவென்றால் தோனியின் மனைவி சாக்சிக்கு ஒரு மலையாள தோழி நெருங்கிய நட்பில் இருந்துள்ளார். தோனியின் மகள் ஜிவா குழந்தையாக இருந்தபோது ஜெயராம் நடித்த அத்வைதம் படத்தில் இடம்பெற்ற "அம்பலப்புழா உன்னிகண்ணனோடு நீ" என்கிற பாடலை பாடித் தான் அந்த தோழி தூங்க வைப்பாராம்.
அப்போது அந்தப் பாடல், அதில் நடித்த ஜெயராம் குறித்து நிறைய செய்திகளை தோனியின் மனைவி கேட்டு அறிந்து கொண்டாராம். அதனால் தான் அந்த கிரிக்கெட் நிகழ்ச்சியின் போது ஜெயராமை பார்த்ததும் தேடி வந்து அவர் கால்களில் விழுந்து ஆசி பெற்றதாக ஜெயராமிடம் தோனியின் மனைவி சாக்சி கூறினாராம். தனது பழைய மலையாள பாடல் ஒன்று இந்தியாவில் ஒரு முக்கியமான கிரிக்கெட் ஜாம்பவானின் குடும்பத்தோடு தனக்கு இப்படி ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தி இருப்பதை அறிந்து நெகிழ்ந்து போனேன் என்று கூறியுள்ளார் ஜெயராம்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!