
‛கருப்பு 300 கோடி வசூலிக்குமா?, மூக்குத்தி அம்மன் 3 உருவாகுமா?
கோடை விடுமுறை முடிய இன்னும் சில நாட்கள் இருக்கிறது. கல்லுாரிகள் திறக்க நாட்கள் ஆகும். ஆகவே, இந்த படம் 300 கோடி வசூலை தாண்டும் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. அடுத்து சில வாரங்கள் தமிழில் பெரிய படங்கள் இல்லை. அடுத்த வாரம் அர்ஜூன் நடித்த பிளாஸ்ட் மட்டுமே வருகிறது. ஆகவே, மற்ற மொழிகளையும் சேர்த்து இந்த வசூல் வரலாம் என்கிறார்கள்.
இது சூர்யா மட்டுமல்ல, சிவகுமார் குடும்ப படங்களில் புது சாதனை. மூக்குத்தி அம்மன் 2 படத்தை எடுக்க நினைத்தார் ஆர்.ஜே.பாலாஜி. ஆனால், அவருக்கு பட நிறுவனத்துக்கும் பிரச்னை வந்தது. அதனால், விலகினார். நயன்தாராவுக்கு பின் திரிஷாவை வைத்து ஒரு அம்மன் படம் எடுக்க நினைத்தார், அதிலும் சிக்கல். கடைசியில் கருப்பு என்ற சாமி படத்தை எடுத்து, அதில் திரிஷாவை நடிக்க வைத்தார். இந்த படம் வெற்றி பெற்றுள்ளதால், மூக்குத்தி அம்மன் 3 அல்லது வேறு சாமி படத்தை திரிஷாவை வைத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்குவார் என்று கூறப்படுகிறது. இப்போது நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தை சுந்தர்.சி இயக்கி வருகிறார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!