நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடித்துள்ள படத்திற்கு ‛அப்பா குட்டி" என பெயரிட்டுள்ளனர். மு மாறன் இயக்கும் இப்படத்தில் நாயகியாக பிரீத்தி அஸ்ரானி நடிக்க, லிதான்யா, பகவதி பெருமாள், ஹரிபிரியா, இசையருவி மதன், சித்ரா லக்ஷ்மணன், ஸ்ரீஜா ரவி, வேட்டை முத்துக்குமார், ஜென்சன் தீவாகர், முருகானந்தம், மூணார் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனியே இசையமைக்கிறார். தந்தை - மகள் உறவை மையமாகக் கொண்டு உருவாகும் ஆக்ஷன் குடும்ப திரைப்படமாக அமைகிறது. குடும்ப ரசிகர்களையும், ஆக்ஷன் ரசிகர்களையும் ஒருசேர கவரும் வகையில் படம் வடிவமைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, பின்னணி பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தை வரும் ஆகஸ்ட் மாதத்தில் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளனர்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!