தனுஷை அணுகும் ஹிந்தி பட இயக்குனர்
மே 12, 2026
Advertisement
கடந்த 2019ம் ஆண்டில் இயக்குனர் ஜெகன் சக்தி இயக்கத்தில் அக் ஷய் குமார் நடித்து, வெளிவந்த படம் "மிஷன் மங்கள்". வித்யாபாலன், சோனாக்ஷி சின்ஹா, டாப்சி, நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்தனர். செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்புவது தொடர்பான கதையில் உருவாகி இருந்தது. படமும் வரவேற்பைப் பெற்றது.
தற்போது இந்த படத்தின் இயக்குனர் ஜெகன் சக்தி, நடிகர் தனுஷை மனதில் வைத்து ஒரு புதிய கதையை உருவாக்கி வருகிறாராம். இது மட்டும் அல்லாமல் அந்த கதை உடன் தனுஷை அணுகி பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தனுஷ் கைவசமாக அரை டஜன் படங்கள் உள்ளன. அதையெல்லாம் மீறி இந்த படத்திற்கு அவர் கால்ஷீட் தருவாரா என்பது இனி தான் தெரிய வரும்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!