
ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம் இந்த சூழ்நிலையில் நடக்குமா?
இப்போதைய அரசியல் மாற்ற சூழ்நிலையில், அந்த படம் நடக்குமா? ஏதாவது சிக்கல் வருமா என சிலர் சந்தேகப்படுகிறார்கள். காரணம் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் அந்த படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் சார்பில் இன்பன் உதயநிதி தயாரிக்கிறார். திமுக ஆட்சியை இழந்த நிலையில், அந்த படத்துக்கு பைனான்ஸ் பிரச்னை இருக்காது. ஆனால், மற்ற தேவைகள், உதவிகள் கிடைக்குமா? தியேட்டர், பிஸினஸ் எப்படி இருக்கும் என பலரும் டவுட். ஆனால், இந்த படத்தை தயாரிக்கும படக்குழுவோ, திட்டமிட்டப்படி படம் தொடங்கி, வெற்றிகரமாக வெளியாகும்.
ரஜினி, கமல் இணையும் படத்தை தடுத்தால் அது எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என எல்லாருக்கும் தெரியும். தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியளவில் கூட அதற்கான கேள்விகள் எழுப்பபடும். அதனால், அந்த படத்துக்கு சிக்கல் வர வாய்ப்பில்லை. தவிர, ரஜினி, கமல் இருவரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துவிட்டனர். கமல்ஹாசன் இன்னும் ஒரு படி மேலேபோய் ஆட்சி அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவர்களுக்குள் தனிப்பட்ட முறையில் எந்த பிரச்னையும இல்லை. அதனால் சில மாதங்களில் இறுதியில் அந்த படம் தொடங்கப்பட்டு, அடுத்த ஆண்டு வர வாய்ப்பு என்கிறார்கள்.
அதேசமயம், கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படம் இழுத்துக் கொண்டே போகிறதாம். சிபி சக்ரவர்த்தி இயக்கப் போகிறார். அஷ்வத் மாரிமுத்து இயக்கப் போகிறார் என்று தகவல் வந்தாலும் படம் தொடங்கப்படவில்லை. ரஜினிக்கு சில விஷயங்கள் திருப்தியாக இல்லை. அதனால், அந்த படம் குறித்த புதுதகவல் இல்லை என்கிறார்கள்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!