
விஜய்க்கு ஆதரவாக செய்தியைப் பகிர்ந்த ஸ்ரேயா
இருந்தாலும் தனிப் பெரும்பான்மையான கட்சி என்பதால் தவெகவை ஆட்சியமைக்க கவர்னர் அழைக்க வேண்டும் என பல்வேறு கட்சியினர் பேசி வருகிறார்கள். ஆனால், இது குறித்து இப்போது கூட தவெக சார்பில் யாரும் வாய் திறந்து பேசவில்லை. அவர்களுக்கு ஆதரவாகப் பேசுபவர்களுக்குக் கூட நன்றி தெரிவிக்கவில்லை.
நேற்று நடிகர் விஷால் சமூக வலைத்தளத்தில் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து அரசியல் பதிவு போட்டிருந்தார். இன்று விஜய்யுடன் "அழகிய தமிழ்மகன்" படத்தில் ஜோடியாக நடித்த நடிகை ஸ்ரேயா அரசியல் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
அவரது சொந்த கருத்தாக எதையும் பதிவு செய்யாமல், விஜய்க்கு ஆதரவாக கமல்ஹாசன் பேசியது குறித்து வந்த செய்தி ஒன்றை அவர் தனது இன்ஸ்டா தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் தேர்தலுக்கு முன்பே விஜய்க்கு ஆதரவு தெரிவித்த நடிகர்கள் சிபிராஜ், சாந்தனு உள்ளிட்டோரும் கவர்னர் அழைக்காதது குறித்து பதிவு செய்துள்ளனர்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!