
ஜனநாயகன் வெளியீடு : முடிவு செய்யப் போவது யார் தெரியுமா?
இந்த மே மாதத்தில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுவும் உறுதியாகாத சூழலில் ஜுன் மாதம் வெளிவரலாம் என்றார்கள். இந்நிலையில் தற்போது ஓடிடி உரிமை காரணமாக படத்தின் வெளியீட்டில் வேறொரு மாற்றம் வந்துள்ளது.
இப்படத்தின் ஓடிடி உரிமையை முதலில் வாங்கிய நிறுவனம் பட வெளியீட்டு தாமதத்தால் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டது. அதன்பின் நடந்த பேச்சு வார்த்தையில் வேறொரு நிறுவனம் படத்தை வாங்க முன் வந்துள்ளது. அதே சமயம் அந்த நிறுவனம் சொல்லும் தேதியில்தான் படத்தை வெளியிட முடியும் என்ற சூழல் உருவாகி உள்ளதாம்.
ஓடிடி நிறுவனங்கள் ஒவ்வொரு மாதத்திற்கும் சில பெரிய படங்கள் வெளியீடு என்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அவர்கள்தான் பல பெரிய படங்களின் வெளியீட்டுத் தேதியை சமீபகாலங்களில் முடிவு செய்கிறார்கள். அவர்கள் கொடுக்கும் மிகப் பெரிய தொகை காரணமாக தயாரிப்பாளர்களும் அதற்கு சம்மதிக்கிறார்கள்.
எனவே, "ஜனநாயகன்" ஓடிடி உரிமையை புதிதாக வாங்கப் போகும் நிறுவனம் எந்தத் தேதியில் சொல்கிறதோ அன்று படம் வெளியாகும் என்கிறார்கள்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!