
அபிஷன் ஜீவிந்த் படத்தில் சிவராஜ் குமார்?
ஏப் 30, 2026
Advertisement
டூரிஸ்ட் பேமிலி படத்தின் வெற்றிக்குப் பிறகு அபிஷன் ஜீவிந்த் இயக்கும் அடுத்த படத்தை அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அவர், "வித் லவ்" படத்தில் கதாநாயகனாக நடித்தார். இயக்குனரை போலவே ஹீரோவாகவும் வெற்றி பெற்றார் அபிஷன். இதையடுத்து மீண்டும் கதாநாயகனாக புதிய படத்தில் அவர் நடிக்கவுள்ளார். லவ்வர், டூரிஸ்ட் பேமிலி போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய பாலமுருகன் என்பவர் இந்த படத்தை இயக்க உள்ளார் . இத்தில் அபிஷன் உடன் இணைந்து இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!