
ரஜினி, கமல், விஜய், அஜித் : தவிக்கும் முன்னணி நடிகர்களின் படங்கள்
மே 1ம் தேதி அஜித்தின் பிறந்தநாள். அஜித் சினிமாவில் நடித்து ஓராண்டு ஆகிவிட்டது. அவரின் அதிக சம்பளம் காரணமாக, அவரை வைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள் என தகவல். மே 1ம் தேதியாவது அஜித் தனது புதுப்பட அறிவிப்பை வெளியிடுவாரா என்பதில் சஸ்பென்ஸ் நீடிக்கிறது.
கமல் தயாரிப்பில், சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ரஜினி நடிக்க இருந்த படத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள். சிபி வெளியேறிவிட்டார். அஷ்வத் மாரிமுத்து இயக்கப் போகிறார். இயக்குனர் ஷங்கர் வில்லன், சிம்ரன், ஷோபனா நடிக்கப் போகிறார்கள் என என தகவல் வந்தாலும், அந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் சொல்லாமல் இருக்கிறார் ரஜினி.
வெங்கட்பிரபு படம் குறித்து பேசாமல் இருக்கிறார் சிவகார்த்திகேயன். தக் லைப் படத்திற்கு பின் தமிழில் நடிக்கும் படத்தை அறிவிக்காமல் இருக்கிறார் கமல்ஹாசன். இப்படியாக முன்னணி ஹீரோக்களின் படங்கள் தவித்து வருகிறது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!