
ரத்னகுமாரின் ‛29 படம் மே 8ம் தேதி ரிலீஸ்
ஏப் 21, 2026
Advertisement
‛மேயாதமான், ஆடை" போன்ற படங்களை இயக்கியவர் ரத்ன குமார். தற்போது ‛29" என்ற படத்தை இயக்கி உள்ளார். விது, ப்ரீத்தி அஸ்ராணி ஆகியோருடன் மாஸ்டர் மகேந்திரன், பிரேம்குமார், அவினாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தை இயக்குனர்கள் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் நிறுவனம், லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது இந்த படம் வருகிற மே 8ம் தேதி திரைக்கு வருவதாக ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ மூலம் அறிவித்துள்ளார்கள்.
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!