
விக்ரம் 63வது படத்தில் கதாநாயகியாக தயாரிப்பாளர் மகள்!
நடிகர் விக்ரமின் 63வது படத்தை "இருமுகன்" படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்குகிறார். இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என அறிவிப்பை வெளியிட்டனர்.
இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக யார் நடிக்கவுள்ளார் என்கிற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இந்த படத்தில் கதாநாயகியாக தயாரிப்பாளர் சிபு தமினின் மகள் ரியா சிபு தான் நடிக்கவுள்ளார். சமீபத்தில் "சர்வம் மாயா" படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவரின் அப்பா சிபு தமின் விக்ரமை வைத்து "இருமுகன், சாமி 2, வீர தீர சூரன்" ஆகிய படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!