80 கோடிக்கு மேல் வசூலித்த யூத்
ஏப் 17, 2026
Advertisement
கென் கருணாஸ் இயக்கம், நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் "யூத்". இப்படம் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் பெரிய வெற்றியைப் பெற்றது. படம் வெளியான நான்கு நாட்களில் 28 கோடியும், 11 நாளில் 50 கோடியும் வசூலித்தது. நேற்று முன்தினத்துடன் இப்படம் 83 கோடி வசூலைக் குவித்துள்ளது.
இந்த ஆண்டில் வெளிவந்த படங்களில் அதிக வசூலைக் குவித்த படங்களில் 2வது இடத்தைப் பெற்றுள்ளது. அதே சமயம் அதிக லாபத்தைக் கொடுத்த படங்களில் முதலிடத்தில் உள்ளது. ராதிகா நடித்து வெளிவந்த "தாய் கிழவி" படம் 75 கோடி வசூலைக் கடந்த படமாக 3வது இடத்தில் உள்ளது. 100 கோடிக்கு மேல் வசூலித்து "பராசக்தி" படம் முதலிடத்தில் இருந்தாலும் அது லாபகரமானதாக அமையவில்லை.
தியேட்டர்களில் 25 நாட்களைக் கடந்த "யூத்" படம் நேற்று முதல் நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!