
ரவி மோகனின் புதிய படம் அறிவிப்பு
ஏப் 15, 2026
Advertisement
நடிகர் ரவி மோகன் தற்போது "கராத்தே பாபு" எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதுதவிர ‛ஜீனி" என்ற படமும் உள்ளது. மேலும் யோகி பாபுவை வைத்து ரவி மோகன் ஒரு படத்தை இயக்கி வருகிறார். அதோடு ப்ரோ கோட் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நேற்று ரவி மோகனின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது. இதை அறிமுக இயக்குனர் ஷியாம் குமார் என்பவர் இயக்குகிறார். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார். மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் இதன் படப்பிடிப்பை துவங்க உள்ளனர்.
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!