பிளாஷ்பேக் : 1989ல் ஒரு வெற்றித் தீபாவளி
ஏப் 06, 2026
Advertisement
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தீபாவளி பண்டிகையில்தான் அதிக படங்கள் வெளிவரும். அவற்றில் ஒரு சிலதான் தோல்வி அடையும். ஆனால் சற்று வித்தியாசமாக 1989ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான அத்தனை படங்களும் ஹிட்டானது.
ரஜினி நடித்த "மாப்பிள்ளை", அவருடன் அமலா, ஸ்ரீவித்யா, நிழல்கள் ரவி, எஸ்.எஸ்.சந்திரன் ஆகியோர் நடித்தனர். ராஜசேகர் இயக்கினார். இசை இளையராஜா. 150 நாட்கள் ஓடியது
கமல் நடித்த "வெற்றி விழா". அவருடன் அமலா, பிரபு, குஷ்பூ ஆகியோர் நடித்தனர். பிரதாப் போத்தன் இயக்கியிருந்தார். சிவாஜி புரொடக்ஷன் தயாரித்த இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். 175 நாட்கள் ஒடி வெள்ளி விழா கொண்டாடியது.
சத்யராஜ் நடித்த "வாத்தியார் வீட்டு பிள்ளை". பி.வாசு இயக்கினார். ஷோபனா, ராஜேஷ், ஸ்ரீவித்யா உள்ளிட்டோர் நடித்தனர். இளையராஜா இசை அமைத்திருந்தார். 50 நாட்கள் ஓடிய படம் தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்தது.
ராமராஜனின் "தங்கமான ராசா". கனகா, கவுண்டமணி, செந்தில், வினுசக்கரவர்த்தி, காந்திமதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இளையராஜா இசை அமைத்திருந்தார். 100 நாள் படம்.
விஜயகாந்தின் "ராஜநடை". அவருடன் சீதா, கவுதமி நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்நாதன் இசை அமைத்திருந்தார். பி.வாசு இயக்கி இருந்தார். 75 நாள் படம்.
கே.பாலச்சந்தரின் "புதுப்புது அர்த்தங்கள்". ரஹ்மான், சித்தாரா, கீதா நடித்திருந்தனர். இளையராஜா இசை அமைத்திருந்தார். 100 நாள் படம்.
இந்த படங்கள் தவிர சத்யராஜ் நடித்த "திராவிடன்", ராமராஜன் நடித்த "அன்புக்கட்டளை" படங்களும் வெளியானது. இவைகள் அதிகநாள் ஓடாவிட்டாலும் தயாரிப்பாளருக்கு லாபம் தந்த படங்களானது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!