
2 ஆயிரம் கோடி வசூலிக்குமா துரந்தர் 2 : மாதவன் செம ஹேப்பி
தமிழகத்திலும் இந்தி படங்களின் வரிசையில் அதிகமாக வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முக்கியமான கேரக்டரில் உளவு அதிகாரியாக மாதவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அவர் ஆஸ்திரேலியாவில் இருந்தாலும் போனில், சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறதாம்.
இந்த படம் குறித்து அவர் கூறுகையில், "எனக்கும் அந்த கேரக்டரை யாரை மனதில் வைத்து உருவாக்கினார்களோ, அவருக்கும் எந்த சம்பந்தம் இருக்காது. ஆனாலும், என்னை மாற்றினார்கள். அந்த மேக்கப் போடவே 4 மணி நேரம் ஆகும். இப்போது பாராட்டுகளை கேட்கும்போது அந்த கஷ்டம் பறந்துவிட்டது. இப்படிப்பட்ட தேசபக்தி படத்தில், தேசத்தின் மீது அக்கறை, பாசம் கொண்ட ஒருவர் கேரக்டரில் நடித்தது எனக்கு கடவுள் கொடுத்த வாய்ப்பாகவே பார்க்கிறேன். தமிழகத்தில் இருந்து கூட ஏகப்பட்ட போன். உன் சீனுக்கு ஏகப்பட்ட கைதட்டல், விசல் என்கிறார்கள். அதை கேட்கவே சந்தோசமாக இருக்கிறது"" என்று கூறியுள்ளார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!