
போலீஸ் வேடம் : தயங்கிய பவானிஸ்ரீ
பரத் ஹீரோவாக இருக்கிறார். நானும் சின்னவயதில் இருந்து அவர் பாடல்களை விரும்பி கேட்பேன், அவர் படங்களை ரசிப்பேன். மற்றவர்கள் நடிக்க கூட அவர் உதவி செய்கிறார்கள். படம் நன்றாக வர பல ஐடியா கொடுக்கிறார். அது நல்ல விஷயம். 25 ஆண்டுகளுக்குபின் பூவே உனக்காக சங்கீதா நடிக்கிறாங்க. அவங்க இப்பவும் அப்படியே அழகாக இருக்காங்க. அவருடன் நடித்தது நல்ல அனுபவம். இதில் இன்னொரு ஹீரோவாக அஜய் நடிக்கிறார். நானும் அவரும் ஒன்றாக நடிப்பு படித்தோம். அப்புறம், அவர் வெளிநாடு போய்விட்டார். இப்போது மீண்டும் சினிமாவுக்கு வந்து நடிப்பது மகிழ்ச்சி. நான் இசைக் குடும்பத்தில் இருந்து வந்தாலும் நான் பாடகி அல்ல, ஆனால், பல மேடைகளில் நீ பாடு என்று கேட்டார்கள். காளிதாஸ் முதல் பாகம் மாதிரி, இந்த பாகமும் ஹிட்டாகும்"" என்றார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!