
பிளாஷ்பேக் : வில்லனுக்கு குரல் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம்
மென்மையான குரல் வளம் கொண்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் வில்லனுக்கும் டப்பிங் பேசினார். "அர்ஜுன்" என்ற ஹிந்திப் படம்தான் தமிழில் "சத்யா" என்று ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தில் வில்லனாக கிட்டி நடித்தார். அவரது தோற்றம் வில்லனுக்கு சரியாக இருந்தது. ஆனால் குரல் மேட்ச் ஆகவில்லை. இதனால் கமல் கேட்டுக் கொண்டதற்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம் டப்பிங் பேசினார். தனது குரலை சற்று வித்தியாசப்படுத்தி அவர் பேசியதால் அது டப்பிங் வாய்ஸ் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதே படத்தில் "வளையோசை கலகலவென" என்கிற பாடலை லதா மங்கேஷ்கருடன் இணைந்து கலகலவென பாடி இருந்தார். அமலா நாயகியாக நடித்திருந்தார். கே.பாலச்சந்தரிடம் உதவியாளராக இருந்த சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய படம் இது. கமல்ஹாசனே தயாரித்திருந்தார். தமிழ் சினிமாவின் முதல் கேங்ஸ்டர் படம் என்று இதனை குறிப்பிடுவார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!