இயக்குனர் விஜய் என் வழிகாட்டி : ஜியா சங்கர் நெகிழ்ச்சி
மார் 03, 2026
Advertisement
மாலி அன்ட் மான்வி மூவி மேக்கர்ஸ், டி ஸ்டுடியோஸ், டென்வி புரொடக்ஷன் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் "காதல் ரீசெட் ரிப்பீட்". விஜய் இயக்கி உள்ளார். படத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர், அர்ஜுன் அசோகன், எம்.எஸ்.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். வருகிற 6ம் தேதி வெளிவருகிறது. இதை முன்னிட்டு படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது.
ஜியா சங்கர் கூறுகையில், ‛‛இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல் ஆனது. வாழ்க்கையில் வாய்ப்பிற்காக காத்திருந்தேன். இயக்குநர் விஜயை சந்தித்தேன். அவர் என் மீது முழுமையான நம்பிக்கையை வைத்தார். அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. இந்தப் படத்தில் பணியாற்றியது எனக்கு கிடைத்த மிக சிறந்த மறக்க முடியாத அனுபவம். இது என்னுடைய கனவு. தமிழ் மற்றும் தென்னிந்திய திரைப்படங்களில் பணியாற்ற வேண்டும் என்பதும் என்னுடைய கனவு. அதை தமிழில் இருந்து தொடங்கி இருக்கிறேன்.
இயக்குநர் விஜய் மிகச் சிறந்த இயக்குநர் மட்டுமல்ல சிறந்த மனிதர். படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொரு கலைஞர்களையும் அவர்களுக்கு ஏற்ற வகையில் சவுகரியமான சூழலை உருவாக்கி தருவார். அனைவர் மீதும் அக்கறை செலுத்துவார். என் வாழ்க்கையில் முதல் வழிகாட்டி என் அம்மா தான். அவருக்கு அடுத்த வழிகாட்டி இயக்குநர் விஜய் தான். இது என்னுடைய முதல் தமிழ் படம். இந்தத் படத்தை பார்த்துவிட்டு திரையரங்கத்தை விட்டு வெளியேறும்போது ரசிகர்களின் மனதில் நாங்கள் இடம் பிடித்திருப்போம் என நம்புகிறேன்"" என்றார்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!