
ரஜினி படப்பிடிப்பு எப்போது : சிபி சக்கரவர்த்தி சொன்ன பதில்
ரஜினி நடித்து வரும் ஜெயிலர் 2 படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. அடுத்த மாதம் ஷாருக்கான் வந்து நடிக்கப் போகிறார். அதனுடன் இந்த படம் நிறைவடையும். அதற்கடுத்து சிபி சக்கவர்த்திக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார் ரஜினி. இந்த ஆண்டு முதல் அடுத்த ஆண்டு தொடக்கம் வரை படப்பிடிப்பு நடக்கும். அடுத்து கமலுடன் இணைந்து நடிக்கப் போகிறார் ரஜினி என்கிறார்கள்.
கமல் தயாரிக்க, ரஜினி நடிக்கும் படத்தின் பட்ஜெட் சின்னது. அந்த படத்தைதான் சிபி இயக்குகிறார். நெல்சன் இயக்க, கமல், ரஜினி நடிக்கும் படத்தின் பட்ஜெட் பெரியது. அதை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்கிறது. கிட்டத்தட்ட ஜெயிலர் 2, அடுத்த இரண்டு படங்களுக்கு ரஜினியின் சம்பளம் ஒன்றுதான். அது, தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, தென்னிந்திய சினிமாவிலும் யாரும் வாங்காதது. அதனால் தான் 75 வயதில் இப்படி பிஸியாக இருக்கிறார் ரஜினிகாந்த் என்கிறார்கள்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!