
லோகா 2 படப்பிடிப்பு எப்போது? அப்டேட் கொடுத்த கல்யாணி பிரியதர்ஷன்
மலையாளத்தில் துல்கர் சல்மான் தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்து கடந்தாண்டு வெளியானப்படம் "லோகா சாப்டர் 1: சந்திரா". இதில் "சூப்பர் உமன்" கதாபாத்திரத்தில் நடித்த கல்யாணியின் நடிப்பு பலரது பாராட்டை பெற்றது. 250 கோடிக்கு மேல் வசூலித்த இப்படத்தின் 2ம் பாகத்தில் டொவினோ தாமஸ் நடிப்பார் எனக் கூறப்படுகிறது. அதில் கல்யாணி பிரியதர்ஷனின் கதாபாத்திரம் இடம்பெறுமா என்ற சந்தேகம் எழுந்தது.
இது தொடர்பாக கல்யாணி பிரிதர்ஷன் அளித்த பேட்டியில், ""லோகா - 2 கதையை எழுதி வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு வரும் செப்டம்பரில் துவங்கும். இந்தப் பாகத்திலும் நான் இருக்கிறேன்"" என சர்ப்ரைஸான அப்டேட் கொடுத்துள்ளார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!