ஜெய் ஹனுமான் விரைவில் ஆரம்பம்
பிப் 13, 2026
Advertisement
பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர், வரலட்சுமி சரத்குமார், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிப்பில் 2024ம் ஆண்டு வெளிவந்த தெலுங்குப் படம் "ஹனு மான்".
பான் இந்தியா படமாக வெளியாகி 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரிய வெற்றியைப் பெற்றது. அப்படத்தின் முடிவிலேயே அதன் அடுத்த பாகமான "ஜெய் ஹனுமான்" பற்றிய அறிவிப்பும் இருந்தது.
2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் இப்படத்தின் "காந்தாரா" நடிகர் ரிஷப் ஷெட்டி நடிக்க உள்ளதாக அறிவித்தார்கள். ஒரு வருடமாகியும் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவில்லை. "காந்தாரா சாப்டர் 1" படத்தின் வேலைகளில் மிகவும் பிஸியாக ரிஷப் இருந்ததால் இந்தத் தாமதம் ஏற்பட்டதாகச் சொன்னார்கள்.
தற்போது படத்தை ஆரம்பிக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார்கள். பிப்ரவரி 22ம் தேதி கர்நாடக மாநிலம் ஹம்பியில் இப்படத்தின் பூஜை நடக்க உள்ளதாம். அதையடுத்து மார்ச் மாதம் முதல் படப்பிடிப்பை நடத்த உள்ளார்கள். படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்த பின் பட வெளியீடு பற்றி அறிவிப்பார்களாம்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!