பிளாஷ்பேக் : எம்ஜிஆருக்கு பதில் நடித்த சிவாஜி
பிப் 10, 2026
Advertisement
1935ல் மதுரையைச் சேர்ந்த ராயல் டாக்கி டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனத்தால் "லலிதாங்கி" என்ற படம் தயாரிக்கப்பட்டது. டி.பி.ராஜலட்சுமி நாயகியாகவும் செல்லப்பா நாயகனாகவும் நடித்தனர். அதே கதை மீண்டும் 1957ல் சிவாஜி கணேசன் மற்றும் பானுமதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ராணி லலிதாங்கி என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.
இந்தப் படத்தின் கதாநாயகனாக முதலில் எம்.ஜி.ஆர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவரும் ராஜசுலோசனாவும் இடம்பெற்ற ஒரு பாடல் மற்றும் நடனக் காட்சி உட்பட சில காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு, எம்ஜிஆர் படத்திலிருந்து விலகினார்.
இந்த கதை ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டதால் நாயகன் கதாபாத்திரத்திற்கு கூடுதல் பலம் சேர்க்க வேண்டும் என்று எம்ஜிஆர் சில யோசனைகள் சொன்னதாகவும் அதை தயாரிப்பு தரப்பு ஏற்காத காரணத்தால் அவர் விலகியதாகவும் கூறப்படுவதுண்டு.
அதன்பிறகு அந்த கேரக்டரில் சிவாஜி கணேசன் நடித்தார். இவர்களுடன் ராஜசுலோசனா, பி.எஸ்.வீரப்பா, கே.ஏ.தங்கவேலு, டி.பி.முத்துலட்சுமி, கே.சாரங்கபாணி, எம்.சரோஜா, செருகளத்தூர் சாமா, எஸ்.டி.சுப்புலட்சுமி, ஆர்.பாலசுப்பிரமணியம், வி.பி.எஸ்.மணி, சேதுபதி, சி.எஸ்.சரோஜா, பிரமீளா, ருக்மிணி, கே. வரலட்சுமி, பி.எஸ்.வெங்கடேசன், ராமராவ், கஜகர்ணம், கண்ணன் மற்றும் மாணிக்கம் ஆகியோரும் நடித்தனர்.
ஒரு நாட்டின் ராணியான லலிதாங்கிற்கும், அந்த நாட்டுக்கும் வரும் ஆபத்திலிருந்து ஹீரோ எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை. இந்த படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!