
லெகசி வெப் தொடரில் கேங்ஸ்டர் ஆக மாதவன்
வீழ்ச்சியை சந்தித்த வயதான கேங்க்ஸ்டரான மாதவன் தனது அதிகாரத்தையும், குடும்பத்தையும் குறிப்பாக தனது பாரம்பரிய மரபையும் எப்படி மீட்டெடுக்கிறார் என்பதுதான் தொடரின் கதை.
இதுகுறித்து தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "குற்ற உலகத்தை பின்னணியாக கொண்ட இந்தக் கதையில், விட்டு சென்ற பாரம்பரியத்தின் மரபு தனது எதிர்காலத்திற்காக ஆசை, விசுவாசம் மற்றும் குடும்ப உறவுகளுடன் எப்படி மோதுகிறது என்பதை இந்த கதை பேசும். "லெகஸி" உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை பிரம்மாண்டமாக சென்றடையும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சாருகேஷ் சேகர் இயக்கி உள்ள இந்த தொடரை ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ தயாரித்துள்ளது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!