
தனுஷ் 55ல் இணைந்தார் மம்முட்டி
அடுத்து இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்க மம்முட்டி இணைந்துள்ளார். இதற்கான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே மம்முட்டியின் ‛கம்மத் அண்ட் கம்மத்" என்ற மலையாள படத்தில் தனுஷ் சிறப்பு ரோலில் நடித்தார். இப்போது முதன்முறையாக இருவரும் ஒரு முழு நீள படத்தில் நடிக்கின்றனர்.
‛இந்த கதையை மம்முட்டி தேர்வு செய்ததும், அது சரித்திரமானது" என படக்குழு குறிப்பிட்டு அவருக்கு நன்றி தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 10ம் தேதி முதல் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்குகிறது. இதற்காக சென்னையில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!