
பிளாஷ்பேக் : ரஜினி, கமலை பிரித்த பஞ்சு அருணாச்சலம்
இந்த நேரத்தில் ரஜினி, கமல் இணைந்து நடித்த அவர்கள், நினைத்தாலே இனிக்கும், அலாவுதீனும் அற்புத விளக்கும் போன்ற படங்கள் சரியாக போகவில்லை. அதனால் இருவரும் இனி சேர்ந்து நடிப்பதில்லை என்று முடிவு செய்தார்கள். ஆனாலும் அவர்கள் பஞ்சு அருணாச்சலத்திற்கு சேர்ந்து நடிப்பதற்காக கால்சீட் கொடுத்திருந்தனர்.
இதனால் பஞ்சு அருணாச்சலத்தை சமாதானப்படுத்த எஸ்.பி. முத்துராமனை தூதராக அனுப்பி வைத்தனர். "ரஜினி, கமல் இருவரும் என் படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார்கள் அவர்கள் சேர்ந்து நடிக்க வேண்டிய அவசியம் இல்லை தனித்தனி படங்களில் நடிக்கட்டும் அதற்குரிய சம்பளத்தை வாங்கிக் கொள்ளட்டும். இரண்டு பேருக்குமே தனித்தனியாக கதைகள் வைத்திருக்கிறேன்" என்று கூறினார் பஞ்சு அருணாச்சலம்.
அவர் சொன்ன கதை தான் கல்யாணராமன் மற்றும் ஆறிலிருந்து அறுபது வரை. இதில் "ஆறிலிருந்து அறுவது வரை" படத்தை எஸ்பி. முத்துராமன் இயக்கினார். "கல்யாணராமன்" படத்தை அவரது உதவியாளர் ஜி.என். ரங்கராஜன் இயக்கினார். இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகி வெற்றி பெற்றது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!