
25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் நச் பதில்
பார்த்திபனின் இரு மகள்களுக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டது. தற்போது தனது மகன் ராதா கிருஷ்ணனுக்கு திருமணம் செய்து வைப்பதற்கான வேலைகளில் அவர் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே ஒரு பேட்டியில் தனது மகன் திருமணம் முடிந்ததும் தானும் திருமணம் செய்ய போவதாக கூறிய விஷயம் வைரலானது.
இதுதொடர்பாக பார்த்திபனை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது, ‛‛திருமணம் ஒருமுறை தான், மனைவி என்கிற ஸ்தானமும் ஒருவருக்கு தான், அதில் தீர்மானமாக இருக்கிறேன். மனமாற்றம் ஏற்படுகிற அளவுக்கு புதிதாக ஒன்றும் நிகழவில்லை. என் இரண்டு பெண்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. எனக்கும் என் பையனுக்கு தான் இன்னும் ஆகல என ஜாலியாக, காமெடியாக சொன்ன விஷயம் அது. நிஜ வாழ்க்கையில் அப்படி சொல்லவில்லை. இந்த செய்தி வெறும் ரசிப்புக்காக மட்டுமே"" என்றார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!