
பின்வாங்கியது ஜனநாயகன்... முந்துமா பராசக்தி
சரி ஜனநாயகன் பின்வாங்கியதால் ஜனவரி 10ல் ரிலீஸ் ஆகும் பராசக்தி படத்துக்கு பலமா அந்த படத்தின் வசூல் அதிகரிக்குமா என்று விசாரித்தால் ஜனநாயகன் பின் வாங்கியது பராசக்திக்கு ஒரு வகையில் பலம். அந்த படம் கிட்டத்தட்ட சிங்கிளாக வருகிறது. பிரபாசின் தி ராஜா சாப், சிரஞ்சீவி தெலுங்கு படம் என மற்ற இரு படங்கள் மட்டுமே வருகின்றன. இதனால் பராசக்தி படத்திற்கு அதிக எண்ணிக்கையில் தியேட்டர் கிடைக்கும்.
ஜனநாயகனுடன் போட்டி பஞ்சாயத்து என எதுவும் இல்லை, ஆனால் வசூல் ரீதியாக படம் வெற்றி பெறுமா என்பது படத்தின் கதை கமர்சியல் விஷயங்களை பொறுத்தே அமையும். எவ்வளவு தியேட்டர் போட்டாலும் படத்தின் கதை சரியில்லை என்றால் மக்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு விஷயங்கள் இல்லை என்றால் அந்த படம் ஓடுவது கடினம். இதற்கு முன்பு சிவகார்த்திகேயன் பல படங்கள் இப்படி ஆகிவிட்டன.
நடிகர்கள், பேனர், இயக்குனர் தியேட்டர் இதை விட கதைதான் முக்கியம் என்கிறார்கள். அதேசமயம் விஜய் ரசிகர்கள் பராசக்திக்கு எதிராக சோசியல் மீடியாவில் பொங்குவது அந்த படத்துக்கு ஒரு வகையில் பாதிப்பு தான். விஜய் ரசிகர்கள் ஜனநாயகன் வராததால் பராசக்தியை பார்ப்பார்கள் என்பதை உறுதியாக சொல்லி விட முடியாது என்கிறார்கள்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!